KVF Logo Full (1)

49-வது சென்னை புத்தகக் கண்காட்சி-அரங்கு எண் 659

"அகத்தின் எழுத்துக்களை வாசித்து பார்க்கவும், அறிவின் தேடலை விசாலமாக்கவும் இதோ ஒரு உன்னதமான வாய்ப்பு!
49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில், தடைகளைத் தகர்த்தெறிந்த பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களின் வியக்கத்தக்க படைப்புகளையும், இன்றைய சமகால கணினி சார் தொழில்நுட்பங்களின் விஸ்வரூபத்தையும் நீங்கள் ஒரே இடத்தில் கண்டறியலாம்.
இதற்காக ஒன்பதாவது பாதையில், அரங்கு எண் 659-ல் 'உளி அரங்கு' உங்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாராக உள்ளது. வரும் ஜனவரி 8, 2026 முதல் ஜனவரி 21, 2026 வரை, தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை இந்த அறிவுத் திருவிழா நடைபெறுகிறது.
'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்' என்ற உயரிய சிந்தனைக்கு உயிர் கொடுக்கும் வகையில், அகத்தின் ஒளியால் உருவான எழுத்துக்களை வாசிக்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் அனைவரும் வருகை தாருங்கள்; அறிவின் தேடலைப் பெற்றுக்கொள்ளுங்கள்!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *