KVF Logo Full (1)

சிறப்பு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பணிவாய்ப்பு – Special Educator Recruitment

சிறப்பு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பணிவாய்ப்பு – Special Educator Recruitment
Special B.Ed (Tamil / English / Maths / Science / History) பயின்ற
பார்வையற்ற அல்லது பார்வையுள்ளவரா நீங்கள்?
📚 ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பைக் எதிர்நோக்குகிறீர்களா?
👉 அப்படியானால் – இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
கர்ண வித்யா அமைப்பானது தமிழகத்தின் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பார்வையற்ற மாணவர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் (கணினி, Assistive Technology) பயன்படுத்தி பாடங்களை கற்பிக்க ஆர்வமுள்ள
Special Educator ஆசிரியர்களை தற்போது பணியமர்த்தி வருகிறது.

இப்பதவிக்கு பார்வையற்றவர்களும் மற்றும் பார்வையுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

📝 பணிச் சுருக்கம் (Job Role):
பார்வையற்ற மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை தொழில்நுட்ப கருவிகள் மூலம் கற்பிக்கத் தெரிந்திருத்தல் அவசியம்.
மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் தொடர்பான பதிவுகளை பராமரித்தல்.
பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து வகுப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல்.

🎓 தகுதிகள் (Eligibility Criteria):
✔ மேற்குறிப்பிட்ட ஏதேனும் பாடப்பிரிவில் Special B.Ed முடித்திருக்க வேண்டும்
✔ அடிப்படை கணினி பயன்பாட்டு திறன் (Basic Computer Skills) அவசியம்
✔ ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் தெரிந்திருத்தல் அவசியம்
✔ 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
✔ கற்பித்தலில் ஆர்வமும், மாணவர்களுடன் அமைதியான அணுகுமுறையும் இருத்தல் அவசியம்.
📍 பணியிடம் (Job Location):
👉 தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நியமனம் செய்யப்படும்
மொத்த பணிஇடங்கள் 10
குறிப்பு கணிதம் மற்றும் அறிவியல் சிறப்பு ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
முதல் கட்ட தேர்வானது இனைய வழியில் நடைபெறும்
இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசி நாள் 31/12/2025
ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய அல்லது கூடுதல் தகவல்களுக்கு கீழே தொடர்புகொள்ளவும்:
📞 திரு. ஆனந்தராஜ் – 91762 36098